டெஸ்ட் போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த ரிஷப் பண்ட் : முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
Jul 2 2022 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்ஹாமில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இந்திய அணி திணறிக்கொண்டிருந்த நிலையில், ஐந்தாவது வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 111 பந்துகளில் 20 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 146 ரன்களை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து ரிஷப் பண்ட் புதிய மைல்கல்லை எட்டினார். மேலும், 93 பந்துகளில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையையும் பண்ட் முறியடித்தார். இதனிடையே, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.