பர்மிங்ஹாம் டெஸ்டின் முதல் நாளில் ரிஷப் பந்தின் ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்தியா : ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 குவிப்பு
Jul 2 2022 9:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பர்மிம்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி மோசமான சரிவில் இருந்து மீண்டது.
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்-கள் திணறத்தொடங்கினர். மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது, புஜாரா, சுப்மன்கில், விஹாரி மற்றும் கோலி அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் இந்திய அணி 98 ரன்-களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. அதன் பிறகு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி நிலைத்து ஆடத்தொடங்கியது. பந்த் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 146 ரன் எடுத்த ரிஷப்பந்த் ஜோரூட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். ரவீந்திர ஜடேஜா 83 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.