டி-20 பேட்டிங் தரவரிசையில் அதிக நாள் முதலிடம் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சாதனை
Jun 30 2022 8:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக நாள் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஆயிரத்து 14 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். ஆயிரத்து 13 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். அவர் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வான் உள்ளார். இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் மட்டும் 682 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். டி20 தரவரிசை மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் ஆசாம் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.