மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பினார் செரீனா வில்லியம்ஸ் - ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் பங்கேற்பு

Jun 22 2022 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்‍காவின் செரீனா வில்லியம்ஸ், ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார்.

அமெரிக்‍காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றால், மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். கடந்த வருடம் வேறு எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெறும் ராத்ஸே சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் செரீனா களமிறங்கியுள்ளார். Williams - Jabeur ஜோடி, Tormo -Marie Bouzkova இணையை, 6-2, 6-3 என்ற கணக்‍கில் தோற்கடித்தது. இதன் மூலம் செரினா வில்லியம்ஸ் வெற்றியுடன் மீண்டும் தனது பணத்தை தொடங்கியுள்ளார்.

வரும் 27-ம் தேதி முதல் தொடங்கும் விம்பிள்டன் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் மீண்டும் விளையாடவுள்ளார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்கவுள்ள செரீனா வில்லியம்ஸுக்கு சக டென்னிஸ் வீராங்கனைகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00