தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து
May 21 2022 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பாங்காக்கில் நேற்று நடைபெற்ற காலிறுதியில், தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து, முதல் செட்டை 21க்கு 15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாம் செட்டை ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி 22க்கு 20 என்ற கணக்கில் கைப்பற்றினார். மூன்றாம் செட்டை 21க்கு 13 என்ற கணக்கில் கைப்பற்றி, அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, இன்று நடைபெறும் போட்டியில் சீன வீராங்கனை யு பெய் சென்னுடன் மோதுகிறார்.