திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் : அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வெள்ளி இந்திர விமானத்தில் மாட வீதி உலா

Dec 3 2019 9:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2ம் நாள் உற்சவத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் பராசக்தி அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் 2ம் நாளான நேற்றிரவு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு, அண்ணாமலையார் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் ராஜகோபுரம் முன்புள்ள பதினாறு கால் மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளினர். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, நாகை மாவட்டம் மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, ஆயிரத்து எட்டு சங்குகளால் அபிஷேகம் நடைபெற்றது. கடம் புறப்பாடு செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட சங்குகளை சிவாச்சாரியார்கள், சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீர் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான மலைமேல் மகாதீபம் வரும் 10-ம் தேதி ஏற்றப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00