கோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன்

Oct 9 2019 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சின்ன நெகமம் அருகே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்கோவில் நவராத்திரி விழாவில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் 10ஆம் நாளாக அம்பு விடும் விழா நடைபெற்றது. யாகம் வளர்க்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புண்ணியவாசனம், பாசுபதஸ்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, வண்ணி மரத்தடியில் பால், எண்ணை உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த S.ஏரிபாளையத்தில் ஸ்ரீ நவகிரஹ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 4 ஆம் ஆண்டு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர்.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தங்கத்தேர் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் 58 ஆவது ஆண்டு துர்கா பூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இயற்கை சார்ந்த பொருட்களும், ஆர்கானிக் வண்ணத்திலும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது. பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன், பூஜைகளை பெண்களே நடத்தி வழிபட்டனர். இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இந்த நிலையில் நவராத்திரி விழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் அம்மன் வெள்ளிக்‍குதிரை வாகனத்தில் வேடுபரி அலங்காரத்தில் வீதிஉலா வந்து வன்னிமரத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பிரானூரில் வசிக்கும் குஜாரத்தியர்கள் தாண்டியா எனப்படும் கண்கவர் நடனமாடி நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆண்கள் ஒரு குழுவாகவும், பெண்கள் மற்றொரு குழுவாகவும் தனித்தனியே இசையுடன் பாட்டுப் பாடி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நெல்லையில் தசரா திருவிழாவையொட்டி 44 அம்மன் கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வீதி உலா நடைபெற்றது. நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன், தேவி ஸ்ரீ மாரியம்மன், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சப்பரங்கள் வரிசையாக நின்று அம்பாளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டன. அதன் பிறகு அந்தந்த கோயிலுக்கு சப்பரங்கள் சென்றடைந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00