மஞ்சள் மற்றும் மெஜந்தா நிற பட்டாடையிலும், மல்லிகை, கனகாம்பரம் மலர்கள் சூடியும் காட்சிதரும் அத்திவரதர் - காஞ்சியில் 38வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம்
Aug 7 2019 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அத்திவரதர் இன்று 38-வது நாளாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 38-வது நாளான இன்று, மஞ்சள் மற்றும் மெஜந்தா நிற பட்டாடை அணிந்து மல்லி கனகாம்பரம் மலர்களால் அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலையிலேயே அத்தி வரதரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று மட்டும் சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்திருக்கும் நிலையில், இதுவரை மொத்தம் 61 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் அத்திவரததை தரிசனம் செய்துள்ளனர்.