வத்தலக்குண்டு அருகே, ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா
Aug 3 2019 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வத்தலக்குண்டு அருகே, ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. இதில், கருப்பணசாமிக்கு மூன்றாயிரத்து 500 ஆடுகள் வெட்டி விருந்து படைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் உள்ள கோட்டை கருப்பணசாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சுமார் மூன்றாயிரத்து 500 ஆட்டுக் கிடாய்கள் நேர்த்திக்கடனாக பலி கொடுக்கப்பட்டு மாபெரும் விருந்து நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையும் ஆடிப்பெருக்கும் அடுத்தடுத்த நாளில் வந்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இரவு தொடங்கிய விருந்து கிடாய் விருந்து காலை வரை நடைபெற்றது. மீதியான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல், கோவில் அருகிலேயே மக்கள் புதைத்துவிட்டுச் சென்றதும் இந்த விழாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.