ஆடிப்பெருக்கையொட்டி, புதுமணத் தம்பதியர் சிறப்பு பூஜை - காவிரி வறண்டதால் குறைந்த தண்ணீரில் வழிபாடு நடத்திய மக்கள்

Aug 4 2019 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழர்களின் பாரம்பரிய ஆடிப்பெருக்கு விழா, இன்று கொண்டாடப்படும் நிலையில், காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் இவ்விழா களையிழந்து காணப்படுகிறது.

தமிழர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்துவரும் ஆடிப்பெருக்கு விழா, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புதுமணத் தம்பதியர், நீர்நிலைகளுக்குச் சென்று பூஜைகள் நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் காவிரி ஆற்றங்கரையில் திரண்ட புதுமணத் தம்பதியினர், தாங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு, புனித நீராடினர். பொங்கிவரும் காவிரி போன்று தங்களது வாழ்வும் பெருகவும், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதுபோல மகிழ்ச்சி நிலைக்கவும், மாங்கல்யம் பெருக்கவும், வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கள பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலிமாற்றிக்கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மாயனூர் காவிரியாற்றில் புதுமணத் தம்பதிகள் வழிபாடு நடத்தினர். புத்தாடை உடுத்தி, புது திருமாங்கல்யம் அணிந்து, காவிரித் தாயை வழிபட்டனர்.

நெல்லையில், தாமிரபரணி நதிக்கரையில், குறுக்குத்துறை பகுதியில் ஏராளமான பெண்கள் வழிபட்டனர். பலவகை உணவு படைத்து படையலிட்டு, புது மாங்கல்யம் மாற்றி வழிபட்ட பெண்கள், மற்றவர்களுக்கும் தாலிக் கயிறு வழங்கினர்.

இதனிடையே, ஆடிப்பெருக்கையொட்டி, மதுரை அழகர்கோவிலில், நூபுரகங்கையில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். மேலும், அங்கிருந்து புனிதநீரை தங்கள் வீடுகளில் தெளிப்பதற்காக அவர்கள் எடுத்துச் சென்றனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00