ஆடிக்கிருத்திகை - முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Jul 26 2019 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆடிக்‍ கிருத்திகையையொட்டி, தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் ஆலயத்தில் ஆடிக்‍ கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுப்ரமணியசுவாமிக்‍கு அதிகாலையில் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தங்கக்‍ கவச அணிவிக்‍கப்பட்டது. உற்சவர் சண்முக நாதர் சிறப்பு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார். பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் காவடி எடுத்து நேர்த்திக்‍ கடன் செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதேபோல், அறுபடை வீடுகள் மற்றும் ஆலயங்களிலும் ஆடிக்‍கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரத்தில் உள்ள அம்பாள் பர்வதவர்த்தினி ஆலயத்தில் ஆடி திருக்‍கல்யாண விழாவையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்தில் உள்ள தங்கக்‍ கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, வெள்ளி வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00