ரோஜாப்பூ நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் - சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட நறுமண மலர்களால் அலங்காரம் : 26-ம் நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Jul 26 2019 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 26வது நாளாக அத்திவரதர், பக்‍தர்களுக்‍க அருள்பாலித்து வருகிறார். ரோஜா நிற பட்டாடையில் காட்சியளிக்‍கும் அதிவரதரை அதிகாலையில் இருந்தே பக்‍தர்கள், தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்‍குப் பின்னர் கோயில் குளத்திலிருந்து எழுந்தருளும் நிகழ்வு, கடந்த 1-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் வந்து அருளாளர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பக்‍தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அருளாளர் அத்திவரதர் வைபவத்தின் 26-ம் நாளான இன்று, அத்திவரதர், ரோஜாப்பூ நிற பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார். அத்திவரதருக்‍கு, தங்கக்‍ கிரீடம் அணிவிக்‍கப்பட்டு, துளசி, சம்பங்கி, மல்லிகை, முல்லை ஆகிய நறுமண மலர்களால் வெகு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருளாளர் அத்திவரதரை மனமுருக வேண்டி தரிசனம் செய்து வருகிறார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00