பழநி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.9 கோடி வசூல் : காணிக்கையாக பெறப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளி!
Sep 28 2023 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 9 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து இரண்டு நாட்களாக எண்ணப்பட்டன. இதில் 5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாய் ரொக்கமும், ஆயிரத்து 419 கிராம் தங்கமும், 18 ஆயிரத்து 185 கிராம் வெள்ளியும், ஆயிரத்து 366 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.