சென்னையில் விநாயகர் சிலை கரைக்கப்படவுள்ள பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூரில் பலத்த பாதுகாப்பு : 16,500 காவலர்கள், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் குவிப்பு
Sep 23 2023 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை இன்றும் நாளையும் கரைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது. 17 வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இதனிடையே, சிலைகளை கரைக்க கன்வேயர் பெல்ட், கிரேன்கள், படகுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 18 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.