திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு பூஜை : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
Sep 23 2023 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் எள், மற்றும் நெய்விளக்கிட்டு வழிபாடு செய்தனர்.