தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம்

Jun 1 2023 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், சுவாமிக்கு மகா தீபாரதணை காண்பிக்கப்பட்டன. இதனை, ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த வாண்டான்விடுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள சுந்தரேஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளை நடத்தி, கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி வழிப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சேவுகப் பெருமாள் அய்யனாரை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மலையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள பொய்யா வந்தால் அம்மன் கோயிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், 12 அடி அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, 12 ஆண்டுகளுக்‍குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோபுரக்‍ கலசத்தின் மீது ஊற்றப்பட்டு குடமுழுக்‍கு செய்யப்பட்டது. இதன்பின்னர் அங்கு கூடியிருந்த பக்‍தர்கள் மீது புனித நீர் தெளிக்‍கப்பட்டது.

அரியலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு அருந்தவ நாயகி உடனுறை ஆலந்துறையார் திருக்கோவிலில், 36 ஆண்டுகளுக்‍குப் பிறகு மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கத்துடன் ஆலந்துறையாரை வழிபட்டனர்.

கோவை மாவட்டம் குருந்தமலை பகுதியில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் 12 ஆண்டுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.

சேலம் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாக கன்னியம்மன், ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன், நவ நாயகர்கள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோபுரக்‍ கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் நடந்தேறியது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்‍கப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புத்தர் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பாம்பாலம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலயங்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோபுரக்‍ கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்ட பின்னர், அங்கு குழுமியிருந்த பக்‍தர்கள் மீது புனித நீர் தெளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00