திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்ககான ஏற்பாடுகள் தீவிரம் - பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்
Feb 4 2023 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூசத்தை முன்னிட்டு, பறவை காவடி எடுத்துக் கொண்ட பக்தர்கள் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றனர். மேலும் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சர்ப்ப காவடி என பல்வேறு காவடிகள் எடுத்தும், அழகு குத்தியும் திரளான பக்தர்கள் திருச்செந்தூருக்கு கடந்த சில தினங்களாக சென்று வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர், பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு செல்கிறார். குன்னத்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லை சந்திப்பு வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறார். இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறையினர் பறவை காவடி எடுத்து வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.