திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
Dec 1 2022 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி பொருத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பக்தர்களின் வருகையால் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். கோபுரத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு கண்காணிப்பு கேமராவை பொருத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.