2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் கவரும் வகையில் ஜொலிக்கும் வண்ண வண்ண ஸ்டார்கள்
Dec 1 2022 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டம் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் கடைகள் தோறும் வண்ண வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து பிறப்புகள் பாடல் பாடும் குழுவினர் வீடு வீடாக சென்று பாடத் தொடங்கி விட்டனர். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்த நிலையில் இருந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாட மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.