சபரிமலையில் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்... டிரம்ஸ் இசைத்து மகிழ்வித்த சிவமணி
Nov 30 2022 1:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி நடத்திய டிரம்ஸ் இசைக்கச்சேரி அங்கு வந்த ஐயப்ப பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. சீசன் என்பதால் சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள களைப்பை போக்கும் வகையில் சபரிமலை சன்னிதானம் அருகே உள்ள கலை அரங்கில் நாள்தோறும் பக்தி பாடல்கள், மெல்லிசை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணியின் இசைக்கச்சேரி நேற்று நடைபெற்றது. அவரது இடைவிடாத டிரம்ஸ் இசை ஐயப்ப பக்தர்களின் மனதை உற்சாகப்படுத்தியது.