வடமாநிலங்களில் தொடர்ந்து களைகட்டி வரும் நவராத்திரி திருவிழா - கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்பு
Oct 3 2022 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரியை ஒட்டி வடமாநிலங்களில் உள்ள கோவில்களில், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று, டெல்லியில் உள்ள ஜந்தேவாலன் கோவிலில் அம்மனுக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பே கவுரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள மும்பா தேவி கோவிலில், அதிகாலையிலேயே, அம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
இதனிடையே, பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், பாட்னாவில் உள்ள ஷீத்தல மாதா கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று துர்கா தேவியை வழிபட்டார்.