நாகர்கோவில் அருகே கிறிஸ்துவ தேவாலய விழா : வான வேடிக்கையில் பட்டாசு வெடித்து 14 பேர் காயம்
Oct 2 2022 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கிறிஸ்துவ தேவாலய விழாவையொட்டி வாண வேடிக்கை நடத்தப்பட்டதில், பட்டாசுகள் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல்பெருவிளை என்ற இடத்தில் அமைந்துள்ள ஆதிதூதர் ஆலயத்தில் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று இரவு வாண வேடிக்கை நடைபெற்றது. அப்போது பட்டாசுகள் வெடித்ததில் 14 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து ஆசாரிபள்ளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.