பள்ளி விடுமுறை மற்றும் தசரா பண்டிகை காரணமாக தமிழகத்தின் கோவில் நகரங்களில் குவியும் பக்தர்கள் கூட்டம் - ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமானோர் புனித நீராடல்
Oct 2 2022 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காலாண்டு விடுமுறை மற்றும் நவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஏற்கெனவே தசராவையொட்டி குவிந்திருக்கும் நிலையில், தற்போது தமிழகத்தில் பள்ளி விடுமுறை தொடங்கியிருப்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடும் அவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். தனுஷ்கோடி, ராமர்பாதம், அப்துல்கலாம் நினைவிடம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.