புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு : ஸ்ரீரங்கம் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
Oct 1 2022 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர்.
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர். ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.