சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில், தேவாரம், திருவாசகம் பாட அனுமதி - இந்து சமய அறநிலைய துறை உத்தரவு

Jun 22 2022 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில், தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளித்து, இந்து சமய அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலைய துறை கடலூர் இணை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில், சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது ஏறி நின்று, பக்தர்கள் தேவாரம், திருவாசகம், திருமுறைகளை ஓதி வழிபட, தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு கால பூஜை முடிந்த பின்பும், முதல் 30 நிமிட நேரத்திற்கு தேவாரம், திருவாசகம், திருமுறைகளை ஓதி வழிபட, பக்தர்களை அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவாரம், திருவாசகம், திருமுறைகளை ஓதி வழிபட விரும்பும் பக்தர்கள், கோயில் நிர்வாகத்திடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், திருக்கோயில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமலும் வழிபட வேண்டும் எனவும், அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00