ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி 5ம் நாள் விழா : அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்

Dec 8 2021 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி 5-ம் நாள் விழாவில், நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, விமானப் பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில், பகல்பத்து விழாவின், 5ம் திருநாளான இன்று, நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து "திருமாலை" முதல் பாசுரம், "திருப்பள்ளியெழுச்சி" பாசுரத்திற்கேற்ப ரத்தின பாண்டியன் கொண்டையணிந்து, மார்பில் விமானப்பதக்கம், மற்றும் வைர அபயஹஸ்தம், நெல்லிக்காய்மாலை, மகரஹண்டி, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்களை சாற்றிக்கொண்டு மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளினார். பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். அர்ச்சுன மண்டபத்தில் பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்று பூலோகவைகுண்ட பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு வணங்கிச்சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00