தமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

Mar 20 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் இன்று முதல் மூடப்படுவதாகவும் வரும் 31ம் தேதிவரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று முதல் 31ம் தேதி வரை வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என்றும் எனினும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில்,108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட 7 கோவில்கள் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை முடப்பட்டது. இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை முட மாநில அரசு உத்தரவிட்டதையடுத்து, பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில், ஏகம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு இன்று முதல் 31ம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00