சென்னை ராயப்பேட்டையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும் பலனில்லை : கோவில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

Mar 11 2020 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் நிலங்களை ஆக்‍கிரமிப்பாளரிடம் இருந்து மீட்க, நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில், சிலர் பிரச்சனை செய்து வருவதாக கோவில் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராமமோகன் என்பவர், ஆளுங்கட்சி மற்றும் அரசு அதிகாரிகள் துணையோடு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, 3 மாடி கட்டிடம் கட்டி, கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு விட்டுள்ளார். ஆக்கிரமிப்பு நிலத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஆக்‍கிரமிப்பு செய்யயப்பட்ட நிலத்தை மீட்க, திருத்தொண்டர் சபை சார்பில், நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கில், நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்‍காமல், ஆளுங்கட்சியினர் உதவியுடன், ராமமோகன் பிரச்னை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, காவல் துறையினர் உதவியுடன் நிலத்தை மீட்க உரிய நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என திருத்தொண்டர் சபை நிர்வாகிகள் கேட்டுக்‍கொண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00