சபரிமலையில் பெண்கள் தரிசன வழக்குகளை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம் : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Jan 29 2020 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது, மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு 10 நாட்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்கள், அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த விவகாரங்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று முறையிட்டார். அப்போது அவர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சபரிமலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றமே உரிய கேள்விகளைத் தயாரிக்க வேண்டும் என்றார். இதையடுத்து சபரிமலை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையின்போது, கேள்விகள் முழுக்க சட்ட ரீதியிலானதாக மட்டுமே இருக்கும் என்றும், இந்த வழக்கின் விசாரணை 10 நாட்களுக்கு மேல் நடைபெறாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மனுதாரா்கள் கூடுதல் அவகாசம் கோரினாலும் வழங்கப்பட மாட்டாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00