அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சின்னம்மா கேவியட் மனு தாக்கல் - வழக்கில் தன் கருத்தை கேட்ட பின்பே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என மனு
Jan 31 2023 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில், புரட்சித்தாய் சின்னம்மா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
2017ம் ஆண்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து புரட்சித்தாய் சின்னம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புரட்சித்தாய் சின்னம்மாவின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, செம்மலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சவுந்தர் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.