நாடு முழுவதும் அதிகரிக்‍கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து பேசியதற்கு மன்னிப்புக்‍ கேட்க முடியாது - ராகுல்காந்தி திட்டவட்டம்

Dec 13 2019 7:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் நிலவும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, மேக்‍ இன் இந்தியா திட்டத்தை ஒப்பிட்டு, தான் கூறிய கருத்துக்‍கு மன்னிப்பு கேட்க போவதில்லை என திரு. ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய திரு. ராகுல் காந்தி, நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகளை, மேக்‍ இன் இந்தியா திட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார். இவ்விவகாரம், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என திட்டவட்டமாக கூறினார். 'மேக் இன் இந்தியா' குறித்து பிரதமர் பேசி வருவதாகவும், ஆனால், செய்திதாள்களில், மேக் இன் இந்தியா குறித்த செய்தியை நாம் தினந்தோறும் பார்க்‍கிறோமா? அல்லது, பாலியல் வன்கொடுமை செய்திகளை பார்க்‍கிறோமா? எனக்‍ கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதால் இந்தியாவின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.

மேலும், டெல்லி, பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக மாறிவிட்டதாக, பிரதமர் திரு. மோதியே பேசியுள்ளதாகவும், அவர் பேசிய வீடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும், திரு. ராகுல் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00