குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து இஸ்லாமியர்கள் கவலைப்படத் தேவையில்லை - மாநிலங்களவையில் அமித்ஷா பேச்சு

Dec 11 2019 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நாட்டில் உள்ள ஒரு இஸ்லாமியர் கூட கவலைப்படத் தேவையில்லை என உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மக்‍களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்‍கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்‍கல் செய்த உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, குடியுரிமை சட்டத்திருத்தம் நாட்டிற்கு அவசியம் எனக்‍ கூறினார். வரலாற்று சிறப்பு மிக்‍க இந்த மசோதா குறித்து, நாட்டில் உள்ள ஒரு இஸ்லாமியர் கூட கவலைப்படத் தேவையில்லை என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்‍கு முன்னரே குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டதாகவும், வாக்குவங்கி அரசியலுக்காக, குடியுரிமை மசோதாவை கொண்டுவரவில்லை என்றும் கூறினார்.

மக்‍களவையில், மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு பெரும்பான்மை பலம் இருந்ததால், மசோதா எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்‍குகளும், எதிராக 80 வாக்‍குகளும் பதிவாகின. இந்நிலையில், மாநிலங்களவையில், மசோதா எளிதாக நிறைவேறுமா என கேள்வி எழுந்துள்ளது. 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 240-ஆக உள்ளது. இதில் 121 வாக்‍குகள் ஆதரவாக கிடைத்தால்தான் மசோதா நிறைவேறும்.

பாரதிய ஜனதா கூட்டணிக்‍கு 105 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதிமுக, பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், மசோதாவுக்‍கு ஆதரவாக வாக்‍களிப்பார்கள் என எதிர்ப்பார்க்‍கப்படுகிறது. இந்த கட்சிகள், குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்து வாக்‍களித்தன. மாநிலங்களவையிலும் ஆதரித்து வாக்‍களிக்‍கும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00