தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல் - அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு

Dec 7 2019 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழல் தொடர்பாக, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறி, மாணவர்களை சேர்த்துக்கொள்ள, தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்ததாக, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது கடந்த 2017-ஆம் ஆண்டு புகார் தெரிவிக்‍கப்பட்டது. இதுகுறித்து, அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி மற்றும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெய்ஸ்வால் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் குழு, சுக்லா மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து சுக்லா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெற வேண்டும் என உச்சநீதீமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார்.

ஆனால், தன் மீதான புகார்களை மறுத்த நீதிபதி சுக்லா, பதவி விலகவும் மறுத்ததால் அவருக்கு எந்த பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என 2018-இல் தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார்.

இதனிடையே இவ்வாண்டு ஜூலை மாதம் சுக்லா மீது வழக்குத் தொடர சிபிஐக்கு அனுமதியளித்து அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டார். இதன்படி மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்ட புகாரில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00