பாலியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையருக்‍கு குவியும் பாராட்டுகள் - விவேக், நாகார்ஜுனா, சமந்தா உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் வரவேற்பு

Dec 6 2019 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து‍ கொன்ற குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்‍ கொல்லப்பட்டிருப்பதை திரைப்பட நட்சத்திரங்கள் வரவேற்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்துக்‍ கொல்லப்பட்ட வழக்‍கில் கைதான 4 பேர் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்‍ கொல்லப்பட்டனர். இதனை திரைப்பட நட்சத்திரங்கள் வரவேற்றுள்ளனர்.

ஆந்திர மாநில திரைப்பட முன்னணி நட்சத்திரமான ஜூனியர் NTR தனது ட்விட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நியாயம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெண் மருத்துவரின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக்‍ தனது ட்விட்டர் பக்‍கத்தில், நியாயம் வழங்கப்பட்டுள்ளது என்றும், டாக்‍டர் சகோதரியின் ஆன்மா அமைதி அடையும் என்றும், தகாத வழியில் செல்பவர்களுக்‍கு இதுஒரு சரியான பாடமாக இருக்‍கும் என்றும் பதிவு செய்துள்ளார்.

கடுமையான நடவடிக்‍கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்‍கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ராகுல் பிரீத்தி சிங், தனது ட்விட்டர் பக்‍கத்தில், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களை செய்துவிட்டு தப்பிவிட முடியாது என்றும், என்கவுன்ட்டர் மூலம் பிரியங்கா ரெட்டிக்‍கு நியாயம் கிடைத்துள்ளதாகவும், இதற்காக தெலங்கானா காவல்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இறுதியாக நியாயம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தெலங்கானா காவல்துறையினருக்‍கு மனமார்ந்த நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜூனா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று காலை நல்ல தகவலுடன் விழித்ததாகவும், நியாயம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அச்சம் என்பது பெரிய தீர்வாகும் என்றும், சில நேரங்களில் அதுமட்டுமே தீர்வாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஜெயம்ரவி தனது ட்விட்டர் பக்‍கத்தில், நடந்த சம்பவத்தை நியாயம் என்றே சொல்வேன் என்றும், பிரியங்கா ரெட்டிக்‍கு நியாயம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்‍குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அதிரடி நடவடிக்‍கை எடுத்துள்ள ஹைதராபாத் காவல்துறையினருக்‍கு மரியாதை தெரிவித்துக்‍ கொள்வதாகவும், இந்த நாட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக ஒவ்வொரு பெண்ணும் உணரும் நாளுக்‍காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00