தமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Dec 6 2019 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில், 3 ஆண்டுகால தாமதத்திற்குப் பின்னர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கு வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக, தேர்தல் அறிவிக்‍கப்பட்டது. இதனிடையே, வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு​தொடரப்பட்டது. இந்த வழக்‍கினை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற பகுதிகளுக்‍கு தேர்தலை நடத்த முடியுமா? என கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசும், தேர்தல் ஆணையமும், புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்‍கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில், புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களுக்‍கு 4 மாதங்களுக்‍குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00