தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக்‍கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்‍கொலை

Dec 6 2019 9:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியன் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும், அம்மாநில போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.

தெலங்கானா மாநிலம் மெஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கால்நடை பெண் மருத்துவர், பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர கொலையில், லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலையில் நீதி வேண்டும் என கோரி பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்‍கு விசாரணையை துரிதப்படுத்த தெலங்கானா அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்‍கை மேற்கொண்டனர். இன்று சம்பவப் பகுதிக்‍கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்ப முயன்றதாகக்‍ கூறப்படுகிறது. அப்போது போலீசார் அவர்களை, 4 பேரும் சுட்டுக்‍கொன்றதாக தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00