50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகல தொடக்கம் - நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது

Nov 21 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு, ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவாவில், 50-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில், நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துக்கு வழங்கினார். இந்த விழாவில், பிரான்ஸ் நட்சத்திர நடிகை இசபெல்லா ஹப்பர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. நடிகர் அமிதாப் பச்சனுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. மேலும், இந்த திரைப்பட விழாவில், 76 நாடுகளைச் சேர்ந்த 250 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவற்றில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதை ரசிகர்களுக்‍கும் உடன் பணியாற்றியவர்களுக்‍கும், தமிழ் மக்‍களுக்‍கும் சமர்ப்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00