மாநிலங்களவையில் சிவசேனாவுக்கு இடம் மாற்றப்பட்ட விவகாரம் : மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுக்கு சஞ்சய் ராவத் கடிதம்

Nov 20 2019 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவையில் சிவசேனா கட்சிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது குறித்து, அதன் தலைவர் திரு. வெங்கைய நாயுடுக்கு, அக்கட்சி எம்.பி., திரு. சஞ்சய் ராவத் கடிதம் எழுதி உள்ளார்.

மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான திரு. வெங்கைய நாயுடுக்கு, சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களவையில் சிவசேனா கட்சியின் வரிசை, மூன்றாவதில் இருந்து ஐந்தாவது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற செய்தி‌யைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த‌தாகவும், சிவசேனா கட்சியின் குரலை ஒடுக்கலாம் என்ற அடிப்படையில் வேண்டுமென்றே இந்த நடவடிக்‌கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாத நிலையில், மாநிலங்களவையில் இடம் மாற்றப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், இந்த நடவடிக்கை அவையின் கண்ணியத்தை பாதிப்பதாகவும், சிவசேனா கட்சிக்கு முதல் மூன்று வரிசைகளில் இடம் ஒதுக்க ‍வேண்டும் என்றும் திரு. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00