அசாம் தேசிய பூங்காவில் யானை உயிரிழப்பு
Nov 18 2019 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாமில் உள்ள Orang தேசிய பூங்காவில், ஓசாமா பின்லேடன் என்ற யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த யானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு Goalpara பகுதியில் 5 பேரை தாக்கி கொன்றது. இதையடுத்து காட்டுக்குள் நுழைந்த யானை ஆளில்லா குட்டி விமானத்தின் உதவியுடன் கடந்த 11-ம் தேதி பிடிக்கப்பட்டது. இதையடுத்து, யானை Orang தேசிய பூங்காவில் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் யானை ஒசாமா பின்லேடன் பூங்காவில் இறந்து கிடந்துள்ளது. யானை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.