ரஃபேல் வழக்கின் தீர்ப்பு குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. தொண்டர்கள் கண்டனம் - டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Nov 15 2019 7:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஃபேல் வழக்கின் தீர்ப்பு குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பாஜக தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் ஒப்பந்தத்தில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனக்கூறி, சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆனால், மனுதாரர்கள் சிபிஐ அமைப்பை அணுகி, வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முறையிடலாம் என நீதிபதி கே.எம்.ஜோசப், தெரிவித்தார். நீதிபதி கே.எம்.ஜோசப்பின் கருத்து, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து மேலும் விசாரிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தடைகளை மீறி அலுவலகத்தினுள் நுழைய முற்பட்டவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00