மஹாராஷ்ட்ராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சி தான் - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டம்

Nov 15 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா தலைமையிலான ஆட்சிதான் நடைபெறும் என அக்‍கட்சியின் மூத்த தலைவர் திரு. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா ஆலோசனை நடத்தி வருகிறது. நாளை 3 கட்சிகளும், ஆளுநர் திரு. கோஷ்யாரியை சந்தித்து, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளன. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி.யும், ​மூத்த தலைவருமான திரு. சஞ்சய் ராவத், கடந்த 50 ஆண்டுகளாக சிவசேனாவுக்கு மஹாராஷ்ட்ராவுடன் தொடர்பு உள்ளதாகவும், எனவே, 5 ஆண்டுகள் மட்டுமல்ல அடுத்த 25 ஆண்டுகளுக்கு, மஹாராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சிதான் நடைபெறும் என்றும் தெரிவித்தார். மக்களின் விருப்பத்தின் பேரிலேயே, குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், சுதந்திர போராட்டம் மற்றும் மஹாராஷ்ட்ராவின் வளர்ச்சியில் பழமையான கட்சியான காங்கிரசுக்‍கு முக்கிய பங்கு உள்ளதாகவும் கூறினார். அதன் காரணமாகவே காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00