ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்‍கள் மீதான தீர்ப்பில் நீதிபதி கே.எம்.ஜோசபின் கருத்து முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை திறந்துள்ளதாக ராகுல்காந்தி கருத்து

Nov 15 2019 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்‍கள் மீதான தீர்ப்பில், அமர்வில் இடம்பெற்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தெரிவித்துள்ள கருத்து, முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை திறந்துள்ளதாக திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி, சீராய்வு மனுக்‍கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்‍கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறி மனுக்‍களை நேற்று தள்ளுபடி செய்தது. அதேநேரம், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீதிபதி கே.எம்.ஜோசப், மனுதாரர்கள் சிபிஐ அமைப்பை அணுகி, வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முறையிடலாம் என தெரிவித்தார். இந்நிலையில், நீதிபதி கே.எம்.ஜோசப் தெரிவித்துள்ள கருத்து, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை திறந்து வைத்துள்ளதாக திரு. ராகுல் காந்தி கூறியுள்ளார். இதனிடையே, ரஃபேல் விவகாரத்தில், பொய் பிரச்சாரம் மேற்கொண்டதாக, ராகுல் காந்திக்‍கு எதிராக, நாளை, நாடு முழுவதும் போராட்டம் நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00