ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு வரவேற்பு

Nov 9 2019 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு.மோகன் பகவத், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு. மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த அயோத்தி வழக்கு சரியான தீர்ப்பை எட்டியுள்ளது. இந்த தீர்ப்பை வெற்றி-தோல்வியாக பார்க்கக்‍ கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும் என்று தெரிவித்த அவர், முஸ்லீம்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதாக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணி காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00