மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு : ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி‌ யாரை அழைக்கப்‍ போகிறார் என்பதில், குழப்பம்

Nov 8 2019 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யாரி‌ யாரை அழைக்கப்‍ போகிறார் என்பதில், பரபரப்பு‌ ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி, 161 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க பெரும்பான்‌மையுடன் உள்ளது. எனினும், ஆட்சி அமைப்பதில் இரண்டு கட்சிகளிடையே அதிகாரப் போட்டி நிலவி வருவதால், புதிய அரசு அமைவதில் நீண்ட இழுபறி நீடித்து வருகிறது.

முதலமைச்சர் பதவியை சிவசேனா கட்சிக்கு அளிக்க முடியாது என்று, முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்து விட்டார். இதற்கிடையே, முதலமைச்சர் பதவி அளித்தால் ‌மட்டுமே பா.ஜ.க.,வுக்கு ஆதரவளிக்க முடியும் என்று சிவசேனா கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இரண்டு கட்சிகளுக்குள் முட்டல் மோதல் நிலவ, சிவசேனா கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது என்று, தேசியவாத கா‍ங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார் கூறினார்.

இந்நிலையில், பா.ஜ.க., தங்கள் எம்.எல்.ஏ.,க்களை மூளைச்சலவை செய்யலாம் என்பதால், சிவசேனா கட்சி தங்கள் எம்.எல்.ஏ.,க்களை நட்சத்திர விடுதிகளில் ‌தங்க வைத்துள்ளது.

இன்றுடன் மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள தருணத்தில், புதிய அரசு அமைய வேண்டும். இல்லையெனில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்நிலையில், புதிய அரசு அமைக்க, ஆளுநர் யாரை அழைக்கப் போகிறார்? என்ற பரபரப்பு நிலவுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00