கல்கி ஆசிரமம், வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில் அம்பலம் - ஆசிரமத்திற்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும் கண்டுபிடிப்பு

Oct 21 2019 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்கி ஆசிரமம், வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்கி ஆசிரமத்தில், கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவந்த வருமான வரிச் சோதனை நிறைவு பெற்றுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டப்படாத வருமானம், ஆசிரமத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமாக 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும், துபாய், ஆப்ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில், கல்கி ஆசிரமம், 100 கோடி ரூபாய் அளவுக்‍கு முதலீடு செய்திருப்பதும், வருமான வரிச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹவாலா முறையில், கல்கி ஆசிரமம் பணபரிமாற்றங்களை செய்துள்ளதாகவும், கல்கியின் மகன் மற்றும் மருமகள், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வருமான வரி சோதனைக்கு கல்கி ஆசிரமம் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், தலைமறைவானதாகக்‍ கூறப்படும் கல்கி சாமியாரும், அவரது மனைவியும், திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் தங்கி உள்ளதாகவும் ஆசிரம நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் கல்கி சாமியாரை ஆசிரமத்தில் சந்திக்கலாம் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட புதிய 500, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளின் வீடியோ வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00