மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை

Oct 17 2019 7:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ர மாநிலம் பார்லியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் திரு. மோடி பேசினார். காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து வரலாற்றில் விவாதிக்கப்படும் போதெல்லாம், நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்தும், அதனை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், அவர்களின் கருத்துகள் குறித்தும் நினைவில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் குறித்த மத்திய பா.ஜ.க. அரசின் முடிவால், நாடு அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக தெரிவித்த மோடி, முடிவு எடுத்து தற்போது 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நாடு அழிந்துவிட்டதா? என கேள்வி எழுப்பினார்.

மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் கைதுக்‍கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00