நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்க வாய்ப்பு - பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

Oct 17 2019 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றப் பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 17ம் தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதிவரை நடைபெற்றது. அப்போது முத்தலாக் தடை மசோதா, மோட்டார் வாகன திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உட்பட 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 18ம் தேதி துவங்கி டிசம்பர் 24ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த முறை போன்று இம்முறையும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00