9 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது ஏன்? : காஷ்மீர் நிலவரம் குறித்து மெஹபூபா கேள்வி

Oct 10 2019 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய ராணுவ வீரர்கள், மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்க பயன்படுத்தப்படுவதாக, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முஃப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பினால், எதற்காக 9 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதற்காக வீரர்கள் குவிக்கப்படவில்லை எனவும், போராட்டங்களை தடுப்பதற்காகவே ராணுவத்தினரை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எல்லையை பாதுகாப்பதற்கு பதில், மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்க ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் தியாகங்களை பயன்படுத்தி ஓட்டு வாங்குவதே மத்திய பா.ஜ.க அரசின் நோக்கமென்றும், காஷ்மீர் மக்களைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை எனவும் மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00