கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுக்‍கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை - 30க்‍கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் சோதனையால் பரபரப்பு

Oct 10 2019 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில், அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் திரு. பரமேஸ்வரா தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியின்போது துணை முதலமைச்சராக பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. பரமேஸ்வராவுக்‍கு தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பரமேஸ்வரா தொடர்புடைய அறக்கட்டளையால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரியில், வருமான வரித்துறை முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, சோதனை நடைபெறுவதாகக்‍ கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரிமான வரி சோதனை குறித்து தனக்‍கு தெரியாது என்றும், சோதனை நடத்துவதால் தனக்‍கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். தங்கள் பக்‍கத்தில் தவறு இருந்தால் திருத்திக்‍கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00