காங்கிரஸ் கட்சியின் நிலை மோசமாக உள்ளதாக சல்மான்குர்ஷித்தைத் தொடர்ந்து, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் கருத்து - உடனடியாக சீரமைப்பு நடவடிக்‍கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

Oct 10 2019 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதாகவும், உடனடியாக ஆய்வு செய்து நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்றும், அக்‍கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி தலைவர் பதவியை திரு. ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் காங்கிரசின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலையை கட்சி சந்தித்து வருவதாகவும், அக்‍கட்சியின் மூத்த தலைவர் திரு. சல்மான் குர்ஷித் அண்மையில் கூறி இருந்தார்.

இதுகுறித்து, அக்‍கட்சியின் முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினர் திரு. ஜோதிராதித்ய சிந்தியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி, தான் ஏதும் சொல்ல விரும்பவில்லை என்றும், ஆனால் காங்கிரசின் தற்போதைய நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதாகவும் கூறினார். காங்கிரசின் நிலைமையை ஆய்வு செய்து, உடனடியாக மேம்படுத்தவில்லை என்றால், கட்சி பேரழிவை சந்திக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சல்மான் குர்ஷித்தைத் தொடர்ந்து, ஜோதிராதித்யா சிந்தியாவும் அதே கருத்தை தெரிவித்துள்ளது, காங்கிரஸ் கட்சிக்‍குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00